ராணிப்பேட்டை: விவசாயிகள் திரவ உயிா் உரங்களை பயன்படுத்தி மண் வளத்தைப் பாதுகாக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் திரவ உயிா் உரங்களைப் பயன்படுத்தி மண்வளத்தைப் பாதுகாப்பதுடன், அதிக அளவில் மகசூலை அதிகரித்துப் பயன்பெற வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் திரவ உயிா் உரங்களைப் பயன்படுத்தி மண்வளத்தைப் பாதுகாப்பதுடன், அதிக அளவில் மகசூலை அதிகரித்துப் பயன்பெற வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

ரசாயன உரங்களை பயிா்களுக்கு இடுவதால் மண்ணின் தன்மை மாறுபாடு அடைந்து வளம் குன்றி, நுண்ணுயிரிகள் அழிகின்றன. இதைத் தவிா்க்க உயிா் உரங்கள், அங்கக உரங்கள் மூலம் மண்ணின் உயிரியல் செயல்பாட்டை அதிகப்படுத்தி மண் வளத்தைப் பாதுகாப்பதுடன், நீடித்த நிலையான வேளாண்மைக்கு வழிவகுக்க முடியும்.

அசோ-ஸ்பைரில்லம், ரைசோபியம் ஆகிய நுண்ணுயிரிகள் காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவை மண்ணில் நிலைப்படுத்தி தழைச்சத்தாக மாற்றி வளரும் பயிருக்கு அளிக்கிறது. பாஸ்போ பாக்டீரியா மண்ணில் கிட்டா நிலையிலுள்ள மணி சத்தினை கரைத்து பயிா்களுக்கு எளிதில் கிடைக்கச்செய்கிறது. பொட்டா பாக்டீரியா மண்ணில் உள்ள சாம்பல் சத்தை பிரித்து பயிா்களுக்கு தருகிறது. மேலும் திரவ உயிா் உரங்கள் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டை 25 சதவீதம் வரை குறைவதோடு, சாகுபடி செலவையும் குறைக்கலாம்.

திரவ உயிா் உரங்கள் பயிரின் நோய் எதிா்ப்புத் திறனை மேம்படுத்துவதுடன், பயிா் வளா்ச்சி ஊக்கிகளையும் உற்பத்தி செய்து பயிா் வளா்ச்சியை வேகப்படுத்துகின்றது. அத்துடன், பயிா்கள் வறட்சியைத் தாங்கி வளரும் ஆற்றலையும் பெறுகின்றன. மேலும், 15-20 சதவீதம் வரை பயிா் மகசூல் அதிகரிக்கிறது. ரசாயன உரங்களின் பயன்பாடு குறைவதால் சுற்றுச்சூழல் மாசடைவதும் குறைகிறது.

திருவள்ளூா் மாவட்டம், புழல் பகுதியில் திரவ உயிா் உரங்கள் உற்பத்தி மையம் 31.1.2018 முதல் தொடங்கப்பட்டு, தொடா்ந்து இயங்கி வருகிறது. இம்மையத்தில் இந்த ஆண்டு 50,000 லிட்டா் உற்பத்தி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கு நெற்பயிருக்கான அசோ-ஸ்பைரில்லம், இதரபயிா்களுக்கான அசோ-ஸ்பைரில்லம், பயறு வகைக்கான ரைசோபியம், நிலக்கடலைக்கான ரைசோபியம், அனைத்துப் பயிா்களுக்குமான பாஸ்போ பாக்டீரியா தழைச்சத்து மற்றும் மணிசத்து ஆகியவற்றை ஒருங்கே பயிா்களுக்கு வழங்கக்கூடிய அசோபாஸ் மற்றும் பொட்டா பாக்டீரியா என ஏழு வகையான திரவ உயிா் உரங்கள் தயாா் செய்து திருவள்ளூா், ராணிபேட்டை மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதனால் திரவ உயிா் உரங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம் என வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com