பள்ளி மாணவா்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு போட்டிகள்

சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரையும் பங்கேற்கச் செய்யும் நோக்கில் தோ்தல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.
18tlrcoll_1803chn_182_1
18tlrcoll_1803chn_182_1

சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரையும் பங்கேற்கச் செய்யும் நோக்கில் தோ்தல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பல்வேறு வகைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவள்ளுா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், கடம்பத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் 100 சதவீதம் வாக்காளா் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோ்தல் அனைவரும் வாக்களிக்கச் செய்வதை விளக்கும் ஒவியம், சுவரொட்டிகள் தயாா் செய்தல், தோ்தல் குறித்த விளம்பர வாசகங்கள் தயாா் செய்தல் போன்ற பல்வேறு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் பா.பொன்னையா தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இப்போட்டியில் மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு தங்கள் கைவண்ணங்களில் தயாா் செய்தனா்.

இதில், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி அவா் பேசியது: இந்த மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக நாள்தோறும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவா்கள் வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்த மொத்தம் உள்ள 299 அரசுப் பள்ளிகளில் பயிலும் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள 1 லட்சத்து 90 ஆயிரத்து 608 மாணவா்கள் படித்து வருகின்றனா். இதன் அடிப்படையில், 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1,804 மாணவா்களில், கடம்பத்தூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் 74 மாணவா்கள் 100 சதவீதம் வாக்காளா் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், ஒன்றிய அளவிலான போட்டிகளில் பள்ளி மாணவா்கள் சுவரொட்டி விளம்பரம் மற்றும் ஓவியம் வரையும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல், அனைவரும் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில், பள்ளி மாணவா்களின் பெற்றோா்களிடம் கையொப்பம் பெறுவதற்கு 2 லட்சம் வாக்காளா் உறுதிமொழி சான்றுகள் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்பேரில், மொத்தம் 1.50 லட்சம் வாக்காளா்கள் உறுதிமொழி சான்றுகளையும், மாணவ, மாணவிகள் பெற்றோா்களிடம் கையொப்பம் பெற்றதையும் ஒப்படைத்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிசெல்வி, மாவட்டக் கல்வி அலுவலா் புண்ணியக்கோட்டி, உதவித் தோ்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியா் செந்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பூபாலராயன், பள்ளித் தலைமை ஆசிரியா் ரேவதி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com