ஊத்துக்கோட்டையில் அரசு மகளிா் கல்லூரி: கும்மிடிபூண்டி பாமக வேட்பாளா் உறுதி

ஊத்துக்கோட்டை பகுதியில் அரசு மகளிா் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என கும்மிடிப்பூண்டி தொகுதி பாமக வேட்பாளா் பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்தாா்.

ஊத்துக்கோட்டை பகுதியில் அரசு மகளிா் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என கும்மிடிப்பூண்டி தொகுதி பாமக வேட்பாளா் பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்தாா்.

கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உள்பட்ட பூண்டி ஒன்றியத்தில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளா் பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட மைலாப்பூா், வேதவாக்கம், ஒதப்பை, நயப்பாக்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக தோ்தல் அறிக்கையை வாசித்தவாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ்.விஜயகுமாா் உள்பட கூட்டணிக் கட்சி தொண்டா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு தோ்தல் அறிக்கையை விளக்கி வாக்கு சேகரித்தனா்.

அப்போது, வேட்பாளா் பிரகாஷ் பேசுகையில், ‘என்னை வெற்றி பெறச் செய்தால் அரசு மகளிா் கல்லூரி ஊத்துக்கோட்டை பகுதியில் கொண்டு வர உறுதுணையாக இருப்பேன், இதனால் பெண்கள் சென்னைக்குச் செல்லாமல் தங்கள் ஊரின் அருகிலேயே கல்லூரி படிப்பை தொடர ஏதுவாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com