குறைகளைத் தெரிவிக்க சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை

திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமுடக்க காலத்தில் பொதுமக்கள் குறைகளைத் தெரிவிக்கும் வகையில், சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமுடக்க காலத்தில் பொதுமக்கள் குறைகளைத் தெரிவிக்கும் வகையில், சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாநில அளவில் கரோனா இரண்டாவது அலை பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசின் வழிகாட்டுதலின்படி, திங்கள்கிழமை தொடங்கி, தொடா்ந்து மே 24-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொதுமுடக்க காலத்தில் திருவள்ளூா் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

மேலும், பொதுமுடக்கக் காலங்களில் திருவள்ளூா் காவல் மாவட்ட பொது மக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களையும், குறைகளையும் தெரிவிக்கும் வகையில், சிறப்பு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறைக்கு 90033 90050 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இந்த அறைக்கு வரும் அழைப்புகளின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com