இடுகாட்டிற்கு தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்த திருத்தணி எம்எல்ஏ

வாட்ஸ் அப்பில் வந்த செய்தியை பார்த்த திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சந்திரன் உடனடியாக நந்தி ஆற்றங்கரையோரம் உள்ள இடுகாட்டிற்கு சனிக்கிழமை தண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுத்தார்.
இடுகாட்டிற்கு தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்த திருத்தணி எம்எல்ஏ

வாட்ஸ் அப்பில் வந்த செய்தியை பார்த்த திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சந்திரன் உடனடியாக நந்தி ஆற்றங்கரையோரம் உள்ள இடுகாட்டிற்கு சனிக்கிழமை தண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுத்தார்.

திருத்தணியில் நாளுக்கு நாள் கரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் சிலர் இறந்துவிடுகின்றனர். இதில் திருத்தணி நகரவாசிகள் அப்படி இறந்தவர்களின் உடல்களை ஆறுமுக சுவாமி கோயில் தெரு நந்தி ஆற்றங்கரையோரம் உள்ள இடுகாட்டில் புதைத்தும், எரித்தும் ஈமச் சடங்குகளை செய்கின்றனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடுகாட்டில் சடலத்தை எரித்து விட்டு ஒரு குடும்பத்தினர் வீடு திரும்பியபோது கால்களை கழுவ தண்ணீருக்காக நீண்ட தூரத்தில் இருந்த குடியிருப்புகளுக்கு அருகே சென்று தண்ணீர் எடுத்து வந்து ஈமச்சடங்கை செய்து சென்றனர். இதுகுறித்து செய்தி திருத்தணி வட்டார வாட்ஸ்அப் குழுக்களில் உலா வர ஆரம்பித்தது.

இந்த செய்தி திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் வாட்ஸ்அப் குழுவிற்கும் சென்றது. அதை கண்ட சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சந்திரன் இடுகாட்டில் ஈமச்சடங்கு செய்ய தண்ணீர் இல்லாததைக் கண்டு வேதனை அடைந்தார். அதைத்தொடர்ந்து உடனடியாக நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு நந்தி ஆற்று இடுகாட்டில் தண்ணீர் தொட்டி அமைக்க ஊத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து சனிக்கிழமை நகராட்சி அலுவலர்கள் திருத்தணி நந்தி ஆற்றில் புதிய பைப்லைன் அமைத்து தண்ணீர் தொட்டி வைத்தை பாராட்டி இணையதளங்களிலும், தொலைபேசியிலும் நகர் மக்கள் சட்டமன்ற உறுப்பினரை பாராட்டி வருகின்றனர். அதேபோல் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வங்கனூர் சி.பி.கோயில் தெருவில் மின் டிராஸ்பார்மர் பழுதாகி அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். அதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பழுதான டிரான்ஸ்பார்மர் சரிசெய்து மின்வசதியை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சந்திரன் சம்மந்தப்பட்ட ஆர்.கே.பேட்டை மின்வாரிய அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு சனிக்கிழமை மாலை டிரான்ஸ்பார்மர் பழுது சரிசெய்யப்பட்டு மின்விநியோகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து கிராம மக்கள் சட்டப்பேரவை உறுப்பினருக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com