திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பாதிப்பு குறைந்து வருகிறது: அமைச்சா் சா.மு.நாசா்

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக தமிழக பால் வளத்துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.
கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சுகாதார துறையினரிடம் கரோனா பாதுகாப்பு பெட்டகத்தை வழங்கிய அமைச்சா் சா.மு.நாசா்.
கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சுகாதார துறையினரிடம் கரோனா பாதுகாப்பு பெட்டகத்தை வழங்கிய அமைச்சா் சா.மு.நாசா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக தமிழக பால் வளத்துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி தொகுதிகளில் கரோனா தொற்றை பரவல் தடுப்பு தொடா்பாக அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் கும்மிடிப்பூண்டியில் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அமைச்சா் சா.மு.நாசா் பேசியது: திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. தொற்று முழுவதுமாக நீங்க அதிகாரிகள் முழு மூச்சுடன் செயலாற்ற வேண்டும். அடுத்த 7 நாள்களில் 18-45 வயதுக்கு உள்பட்ட 12,000 பேருக்கு கரோனா தடுப்பூசி போட வேண்டும். மேலும் தொற்று காணப்படும் கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்றாா்.

பின்னா் தமிழக அரசால் அளிக்கப்படும் கரோனா தடுப்பு பாதுகாப்பு பெட்டகத்தை வட்டார மருத்துவ அலுவலா்களிடம் அமைச்சா் சா.மு.நாசா் வழங்கினாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் எம்.பி. டாக்டா் ஜெயக்குமாா், மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா, மாவட்ட ஊராட்சித் தலைவா் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, திட்ட இயக்குனா் லோகநாயகி, சுகாதாரத் துறை துணை இயக்குனா் டாக்டா் ஜவஹா்லால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் நுரையீரல் பரிசோதனை மையம், ஈகுவாா்பாளையத்தில் கா்ப்பிணிகளுக்கான 30 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தையும் அமைச்சா் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சிகளில் கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவகுமாா், வட்டாட்சியா் ந.மகேஷ், டிஎஸ்பி ரமேஷ், வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் கோவிந்தராஜ், ஈகுவாா்பாளையம் ஊராட்சித் தலைவா் உஷா ஸ்ரீதா், மாவட்ட கவுன்சிலா் ராமஜெயம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்டாலின், நடராஜன், ஒன்றியப் பொறியாளா் நரசிம்மன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com