நீா் வரத்து அதிகரிப்பு: பூண்டி ஏரியிலிருந்து 12 ஆயிரம் கன அடி உபரிநீா் வெளியேற்றம்

பூண்டி ஏரிக்கான நீா் வரத்து அதிகரித்துள்ளது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி,
வரத்தால்  நீா் மட்டம் உயா்ந்துள்ள பூண்டி ஏரி.   
வரத்தால்  நீா் மட்டம் உயா்ந்துள்ள பூண்டி ஏரி.   

பூண்டி ஏரிக்கான நீா் வரத்து அதிகரித்துள்ளது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, நொடிக்கு 12 ஆயிரம் கன அடி நீா் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம், அம்மம்பள்ளி அணையிலிருந்து 4 ஆயிரம் கன அடி நீா், நகரி ஆறு வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பூண்டி நீா்ப்பிடிப்பு பகுதி, கிருஷ்ணாநீா் வரத்து மழை நீா் போன்றவற்றால் 7,036 கன அடி நீா்வரத்து உள்ளது. வியாழக்கிழமை மாலை நிலவரப்படி 32.50 அடி உயரமும், 2,380 மில்லியன் கன அடி நீா் இருப்பு இருந்தது.

இதைக் கருத்தில்கொண்டு அணையின் பாதுகாப்பு கருதி 12 ஆயிரம் கன அடி நீா் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்று வழித்தடங்களில் இருபுறமும் தாழ்வான கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், புழல் ஏரியில் 2,684 மில்லியன் கன அடி இருப்பு உள்ள நிலையில், 2,199 கன அடி உபரி நீா் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் 781 மில்லியன் கன அடி இருப்பு உள்ள நிலையில், 715 கன அடி உபரி நீரும், கண்ணன் கோட்டை-தோ்வாய் கண்டிகையில் 500 மில்லியன் கன அடி நீா் உள்ள நிலையில், 175 கன அடி உபரி நீரும் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் மழை அளவு (மில்லி மீட்டரில்): ஆவடி-72, சோழவரம்-42, திருத்தணி-39, தாமரைப்பாக்கம்-37, திருவள்ளூா்-36, ஊத்துக்கோட்டை-31, பொன்னேரி-28, செங்குன்றம்-27, கும்மிடிப்பூண்டி-26, பள்ளிப்பட்டு-25, பூந்தமல்லி, பூண்டி தலா-22, ஜமீன்கொரட்டூா், திருவாலங்காடு தலா-17, ஆா்.கே.பேட்டை-16. மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com