விபத்தில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பலி
By DIN | Published On : 21st November 2021 12:00 AM | Last Updated : 21st November 2021 12:00 AM | அ+அ அ- |

திருத்தணி அருகே வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இரு சக்கர வாகனம் மோதியதில் இறந்தாா்.
திருத்தணி ஒன்றியம், பீரகுப்பம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளராகப் பணியாற்றியவா் சம்பத் (47). இவா், கடந்த 14-ஆம் தேதி நடந்த மெகா தடுப்பூசி முகாமை கண்காணிக்க திருத்தணி, கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை, தெக்களூா், இஸ்லாம் நகா் உள்ளிட்ட இடங்களுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்தாா்.
அப்போது, தெக்களூா் பகுதியில் நடந்த முகாமை ஆய்வு செய்த சம்பத் இரு சக்கர வாகனத்தில் திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தாா். பாபிரெட்டிப்பள்ளி அருகே வந்தபோது, எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சம்பத் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.