ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனம்: வட்டார வளா்ச்சி அலுவலரிடம் தலைவா்கள் வலியுறுத்தல்

பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் குழுவினா் ஒன்றாக சோ்ந்து

பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் குழுவினா் ஒன்றாக சோ்ந்து வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனா். அப்போது, ஊராட்சிகளில் குப்பையை அகற்ற அனைத்து ஊராட்சிகளுக்கும் பேட்டரி வாகனத்தை வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா்.

பூண்டி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு ஒன்றாக சோ்ந்து செயல்பட்டு வருகிறது. மாதந்தோறும் சங்கத் தலைவா்கள் கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதுபோல் சனிக்கிழமை நடைபெற்றது. பின்னா் வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஷ்பாபுவிடம் பூண்டி ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்புத் தலைவா் சத்யநாராயணன், பொருளாளா் தில்லை குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் ஒன்று சோ்ந்து மனு அளித்தனா்.

இதில், ஊராட்சி மன்றத் தலைவா்களுக்குத் தெரியாமல் பயனாளிகளுக்கு 100 நாள் வேலையை கொடுக்க வேண்டாம், ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் தொகுப்பு வீடுகளை கட்டாயம் வழங்க வேண்டும், ஊராட்சிகளில் குப்பையை அகற்ற அனைத்து ஊராட்சிகளுக்கும் பேட்டரி வாகனத்தை வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா் விரைவில் பரிசீலனை செய்வதாக கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com