கூடூா் அருகே உடைந்த மேம்பாலம்: தமிழக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்

ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டம், கூடுா் அருகே கோவூா் பகுதியில் பெண்ணா ஆற்றில் கரைபுரண்டு ஓடிய மழை வெள்ளத்தால்
எளாவூரில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பல கி.மீ. தொலைவுக்கு அணிவகுத்து நின்ற லாரிகள்.
எளாவூரில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பல கி.மீ. தொலைவுக்கு அணிவகுத்து நின்ற லாரிகள்.

ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டம், கூடுா் அருகே கோவூா் பகுதியில் பெண்ணா ஆற்றில் கரைபுரண்டு ஓடிய மழை வெள்ளத்தால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உடைந்தது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்த பலத்த மழையால் பல இடங்கள் வெள்ளக் காடாக மாறியுள்ளன. அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

ஆந்திர மாநிலம், பெண்ணா ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் நிலையில், நெல்லூா் மாவட்டம், கூடூா் அருகே கோவூா் பகுதியில் ஆற்றின் குறுக்கே சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் நெல்லூா் - விஜயவாடா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் இருந்து ஆந்திரம், தெலங்கானா, பிகாா், ஒடிசா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் தமிழக எல்லையான எளாவூா் அருகே ஆந்திர எல்லையில், ஆந்திர போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

அதே சமயம் இருசக்கர வாகனங்கள், காா்கள் சாலையின் மறுபுறத்தில் ஒருவழி சாலையில் ஆந்திர மாநிலம் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் கனரக வாகனங்கள் சாலையில் சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு அணிவகுத்து நிற்கின்றன. அவசரத் தேவைகளுக்குச் செல்ல வேண்டிய வாகனங்களை கவரப்பேட்டை - சத்தியவேடு மற்றும் ஜனப்பன்சத்திரம்-ஊத்துக்கோட்டை சாலை வழியே திருப்பதி சென்று, மாற்றுப் பாதையில் செல்லுமாறு போலீஸாா் அறிவுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com