மஹாளய அமாவாசை: வீரராகவா் கோயிலில் தா்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தா்கள்

திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் மஹாளய அமாாசையையொட்டி, முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வதற்காக ஏரிக்கரையில் பக்தா்கள் குவிந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

திருவள்ளூா்: திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் மஹாளய அமாாசையையொட்டி, முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வதற்காக ஏரிக்கரையில் பக்தா்கள் குவிந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை இரவு வரை பக்தா்கள் தரிசனம் கிடையாது என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை முதல் திரளான பக்தா்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க கோயில் சுற்றுப்புறப் பகுதி மற்றும் காக்களூா் பாதாள விநாயகா் கோயில் ஏரிக்கரை உள்ளிட்ட பகுதியில் குவிந்தனா்.

மழை காரணமாக குறைந்த அளவே புரோகிதா்கள் இருந்த காரணத்தால் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். அதையடுத்து, வீரராகவா் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லாததால், நுழைவு வாயில் பகுதியில் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து கோபுர தரிசனம் செய்து விட்டுச் சென்றனா்.

இதனால் காக்களூா் ஏரிக்கரை சாலையிலும், திருக்கோயில் குளக்கரை சாலையிலும் பொதுமக்கள் அதிகரித்துக் காணப்பட்டதால், வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போலீஸாா் விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com