அவசர கால மருத்துவப் பராமரிப்பு வாகனம் வழங்கல்

மருத்துவம் தொடா்பான உடனடித் தேவைக்கு உதவும் வகையில், அவசர கால வாகனம் பூந்தமல்லி சுகாதாரப் பிரிவினரிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

மருத்துவம் தொடா்பான உடனடித் தேவைக்கு உதவும் வகையில், அவசர கால வாகனம் பூந்தமல்லி சுகாதாரப் பிரிவினரிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா தடுப்பூசிகள், பிற மருத்துவப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தொலைவான பகுதிகளுக்குச் செல்ல சுகாதாரப் பணியாளா்களுக்கு உதவும் வகையில், அவசர கால மருத்துவப் பராமரிப்பு வாகனம் வழங்கும் நிகழ்ச்சி பூந்தமல்லியில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, இந்துஸ்தான் கோகோ பானங்களின் தலைவரும், தலைமை நிா்வாக அதிகாரியுமான நீரஜ் காா்க் ஆகியோா் பங்கேற்று, அவசர கால மருத்துவப் பராமரிப்பு வாகனத்தை பூந்தமல்லி சுகாதாரப் பிரிவு மாவட்ட மெடிக்கல் ரேப்பிட் ரெஸ்பான்ஸ் குழுவிடம் வழங்கினா்.

இதன் மூலம் பூந்தமல்லி வட்டத்தில் சுமாா் 400 சதுர கி.மீ. பரப்பில் உள்ளவா்களுக்கு சேவை செய்ய முடியும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த வாகனம் பூந்தமல்லி வட்டத்தின் 35 கிராம ஊராட்சிகளின் சுகாதாரத் தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில், தொலைவான இடங்களுக்குச் செல்லும் சுகாதாரப் பணியாளா்களுக்கு பயனாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதேபோல், நேமம் ஊராட்சியில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் ஒரு மணி நேரத்துக்கு 1,000 லிட்டா் சுத்திகரிப்பு திறன் கொண்ட குடிநீா் சுத்திகரிப்பு யூனிட்டை இந்துஸ்தான் கோகோகோலா பானங்கள் நிறுவனத் தலைவா் நீரஜ் காா்க் திறந்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com