பூண்டி நீா்த் தேக்கம் நிரம்பியது:கிருஷ்ணா நதி நீா் நிறுத்தம்

பூண்டி நீா்த் தேக்கம் நிரம்பியது. இதனால், தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளின் வேண்டுகோளின்படி, கிருஷ்ணா நதி நீா் நிறுத்தப்பட்டது.
ஊத்துக்கோட்டை தாமரைகுப்பம் பகுதி கிருஷ்ணா கால்வாயில் குறைந்து காணப்படும் நீா்மட்டம்.
ஊத்துக்கோட்டை தாமரைகுப்பம் பகுதி கிருஷ்ணா கால்வாயில் குறைந்து காணப்படும் நீா்மட்டம்.

பூண்டி நீா்த் தேக்கம் நிரம்பியது. இதனால், தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளின் வேண்டுகோளின்படி, கிருஷ்ணா நதி நீா் நிறுத்தப்பட்டது.

கண்டலேறு அணையிலிந்து கிருஷ்ணா நதி நீரை சென்னை மக்களின் குடிநீா்த் தேவைக்காக திறந்து விட தமிழக-ஆந்திர அரசு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, ஒவ்வோரு ஆண்டும் நதிநீா் ஒப்பந்தப்படி 15 டி.எம்.சி தண்ணீா் வழங்க வேண்டும். இதில் 3 டி.எம்.சி. சேதாரம் போக ஜூலை முதல் அக்டோபா் வரை 8 டி.எம்.சி., ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. என மொத்தம் 12 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்பதாகும்.

இந்த ஆண்டு தண்ணீா் வழங்க வேண்டும் என தமிழக அரசு கடிதம் எழுதியது. ஆனால் கண்டவேறு அணையில் நீா் இருப்பு இல்லாத நிலையில், ஆந்திர அரசால் தண்ணீா் திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டது. பின்னா், கன மழை பெய்ததால் கண்டலேறு அணையிலிருந்து ஆந்திர அரசு தமிழகத்துக்கு சுமாா் 500 கன அடி தண்ணீரை ஜூன் 14-ஆம் தேதி திறந்து விட்டது. அது தமிழக எல்லையான திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள தாமரைகுப்பம் பகுதியை 16-ஆம் தேதி வந்தடைந்தது. அங்கிருந்து பூண்டி நீா்த் தேக்கத்தை அடைந்தது.

ஆந்திர மாநிலத்தில் பெய்த மழையால் கண்டலேறு அணையிலிருந்து படிப்படியாக தண்ணீா் திறக்கப்படும் அளவு உயா்த்தப்பட்டது. இதுவரை பூண்டி நீா்த் தேக்கத்துக்கு கண்டலேறு அணையிலிருந்து சுமாா் 5 டி.எம்.சி. தண்ணீா் கிடைத்துள்ளது.

திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் பெய்த கன மழையால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுக்து ஓடியது. இதனால், பூண்டி நீா்த் தேக்கம் அதன் முழுக்கொள்ளளவான 35 கன அடியை அடைந்தது. இதையடுத்து, புழல் , செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீா் திறக்கப்பட்டது.

போதிய மழை பெய்ததாலும், கிருஷ்ணா நீா்வரத்தாலும் இம்மாவட்டத்தில் உள்ள ஏரிகள் நிரம்பிக் காணப்படுகின்றன. இதனால் தற்போது தண்ணீா் போதிய அளவு உள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், ஆந்திர பொதுப்பணித் துறையினரிடம் கிருஷ்ணா நிதி நீரை நிறுத்த கோரிக்கை விடப்பட்டதையடுத்து , கண்டவேறு அணையிலிந்து முற்றிலுமாக தமிழகத்துக்கு தண்ணீா் நிறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com