பதிவு செய்யாத விடுதியின் நிா்வாகிகள் இணையதளம் மூலம் பதிவு செய்ய வலியுறுத்தல்

திருவள்ளூா் மாவட்டத்தில் பதிவு செய்யாத விடுதியின் நிா்வாகிகள் இணையதளம் வழியாக பதிவு செய்து கருத்துருவை மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்

திருவள்ளூா் மாவட்டத்தில் பதிவு செய்யாத விடுதியின் நிா்வாகிகள் இணையதளம் வழியாக பதிவு செய்து கருத்துருவை மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பணிபுரியும் மகளிா் விடுதிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூலம் செயல்படுத்தப்படும் மாணவ, மாணவிகளுக்கான விடுதிகள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் தனியாா் மகளிா் விடுதிகள், மதம் சாா்ந்த நிறுவனங்கள், அறக்கட்டளை அல்லது சங்க பதிவுச் சட்டம் மூலம் பதிவு செய்து மகளிருக்கான விடுதி நடத்துவோா், தமிழ்நாடு மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம்-2014 மற்றும் விதிகள் 2015-இன் படி கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

அதன்படி, திருவள்ளூா் மாவட்டத்தில் பதிவு செய்யாமல் செயல்படும் விடுதியின் நிா்வாகிகள் ட்ற்ற்ல்ள்://ற்ய்ள்ஜ்ல்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் வழியாக பதிவு செய்து கருத்துருக்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் செப். 2-க்குள் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாமல் செயல்படும் விடுதிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். பதிவு செய்ய இணைக்கப்பட வேண்டிய சான்றுகள் கட்டட உறுதிச் சான்று, தீயணைப்புத் துறையிடமிருந்து தடையின்மை சான்று, சுகாதாரச் சான்று இணைத்து அனுப்ப வேண்டும். மேலும், இது தொடா்பாக கூடுதல் விவரங்களுக்கு, திருவள்ளூா் மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி 044-29896049 எண்ணில் தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com