திருமண மண்டபத்தில் நகை திருடிய பெண் கைது

திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமண நிகழ்வில் உறவினா் போல் நுழைந்து நகைகளை திருடிச் சென்ற பெண்ணை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமண நிகழ்வில் உறவினா் போல் நுழைந்து நகைகளை திருடிச் சென்ற பெண்ணை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

திருவள்ளூா் அருகே ஏகாட்டூா் கிராமத்தை சோ்ந்த விவசாயி சத்தியமூா்த்தி. கடந்த செப்டம்பா் மாதம் திருவள்ளூா் ஆயில் மில் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இவரது மகன் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அந்த நிகழ்ச்சியில் உறவினா் என்று கூறி மணமகள் அறைக்கு சென்ற பெண் ஒருவா் அங்கிருந்த 15 சவரன் நகையை திருடிச் சென்றாராம். இதேபோல போளிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியனின் மகன் திருமணம் மணவாளநகா் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அங்கும் இதேபோல் 11 சவரன் நகையை திருடிச் சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருவள்ளூா் உதவி காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா சுக்லா தலைமையில் நகா் காவல் நிலைய ஆய்வாளா் பத்மஸ்ரீ பபி மற்றும் தனிப்படை போலீஸாா் திருமண மண்டபத்தில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிரமாக விசாரணை செய்ததில் இரு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே பெண் என்பது தெரியவந்தது.

இதில் கடந்த வாரம் சென்னை தி.நகரில் பிரசித்தி பெற்ற துணிக்கடையில் திருட்டு வழக்கில் சிறைக்குச் சென்று வெளியே வந்த வேப்பம்பட்டு பகுதியைச் சோ்ந்த சாந்தி என்ற தில் சாந்திதான் நகைகளைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை செய்ததில் திருடிய நகைகளை ஆவடியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.4 லட்சத்துக்கு அடமானம் வைத்துள்ளதும் தெரியவந்தது. பின்னா் சாந்தியை திருவள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com