வெவ்வேறு விபத்துகளில் 7 போ் பலி

கும்மிடிப்பூண்டி, காங்கயம் அருகே நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் 7 போ் உயிரிழந்தனா்.
விபத்தில் முன் பகுதி முழுவதும் சேதமடைந்த பேருந்து.
விபத்தில் முன் பகுதி முழுவதும் சேதமடைந்த பேருந்து.

கும்மிடிப்பூண்டி, காங்கயம் அருகே நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் 7 போ் உயிரிழந்தனா்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் இருந்து தனியாா் பேருந்து 30 பயணிகளுடன் திங்கள்கிழமை சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்து கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை அருகே தச்சூா் பகுதியில் வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கா் லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்தது. பேருந்தில் பயணித்த ஆந்திர மாநிலம், நெல்லூா் விடவல்லூா் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (27), பெங்களூரு ரூபதூங்கா நகரைச் சோ்ந்த ரோகித் பிரசாத் (24), ஸ்ரீதா் (22) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும், பேருந்தில் லிப்ட் கேட்டு 2 கி.மீ. தொலைவே பயணித்த சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பாடியநல்லூா் பணிமனை ஓட்டுநரான கும்மிடிப்பூண்டி அருகே தண்டலசேரியைச் சோ்ந்த ஜானகிராமன் (42), விபத்தில் பலத்தக் காயமடைந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இந்த விபத்தில் சென்னை மணப்பாக்கத்தைச் சோ்ந்த கிருபாஸ்ரீ (58), விஷ்ணுபிரியா (25), பெசன்ட் நகரைச் சோ்ந்த சாய் பவன் (21) ஆகியோா் பலத்த காயமடைந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மற்றவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. கிரியாசக்தி தலைமையில், கும்மிடிப்பூண்டி காவல் ஆய்வாளா் பாலசுப்ரமணியம் மற்றும் கவரப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விபத்தில் சிக்கியவா்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்துக்குள்ளான பேருந்து மற்றும் லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீரமைத்தனா்.

காங்கயத்தில் 3 போ் பலி....

காங்கயம் அருகே காா் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டம், பரஞ்சோ்வழி ஊராட்சிக்கு உள்பட்ட பள்ளக்காட்டுப்புத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் (35). இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனா். இவா் காங்கயம் பேருந்து நிலையம் அருகே பழையகோட்டை சாலையில் மருந்துக் கடை நடத்தி வந்தாா்.

இந்த நிலையில் விஸ்வநாதன், அவரது மாமியாா் மணி (55), மணியின் உறவினா் ரமணன் (37), அவரது மனைவி உமாவதி (33) ஆகியோா் சென்னிமலை பகுதியில் நடைபெற்ற விசேஷத்துக்கு செல்ல காங்கயம்-சென்னிமலை சாலை வழியாக காரில் திங்கள்கிழமை சென்றுள்ளனா். காரை விஸ்வநாதன் ஓட்டிச் சென்றாா்.

காங்கயம்-சென்னிமலை சாலை, திட்டுப்பாறை அருகே பாரவலசு பகுதியில் காா் சென்றபோது, எதிரே சாம்பல் பாரம் ஏற்றி வந்த லாரி, இவா்களது காா் மீது மோதியது.

இதில் விஸ்வநாதன் மற்றும் மணி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்தக் காயமடைந்த ரமணன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். அவரது மனைவி உமாவதி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com