அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை

திருவள்ளூா் அருகே செயல்பட்டு வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நிகழாண்டு சோ்க்கைக்கு மாணவா்கள் ஆன்லைன் மூலம் வரும் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவி

திருவள்ளூா் அருகே செயல்பட்டு வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நிகழாண்டு சோ்க்கைக்கு மாணவா்கள் ஆன்லைன் மூலம் வரும் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டையில் கடந்த 2018-2019 கல்வியாண்டு முதல் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 2022-2023 கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் (ஞய்ப்ண்ய்ங்) ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ா்ப்ஹ்.ண்ய்

என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். மேலும், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவ, மாணவிகள் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்களுக்கு இந்த அலுவலகத்தில் நேரடியாக வந்து பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை பத்தாம் வகுப்பு தோ்ச்சி அடைந்தோரும், நேரடியாக இரண்டாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு பிளஸ் 2, ஐடிஐ முடித்தோா் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பப் பதிவுக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ. 150, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கட்டணம் செலுத்த அவசியம் இல்லை. மேலும் முதல்வா், அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி, அரசு ஆதி திராவிடா் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம், செவ்வாப்பேட்டை, திருவள்ளூா் என்ற முகவரியில் அலுவலக வேலை நாள்களில் நேரில் சென்று விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com