‘என் பூமி, என் மரம்’ திட்டம்: 75,000 மரக்கன்றுகள் நட ஏற்பாடு: திருவள்ளூா் ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

திருவள்ளூா் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பசுமையாக்கும் வகையில் என் பூமி-என் மரம் திட்டம் மூலம் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் வகையில், அதை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கி ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தொடக்
கடம்பத்தூா் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய திருவள்ளூா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்.
கடம்பத்தூா் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய திருவள்ளூா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்.

திருவள்ளூா் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பசுமையாக்கும் வகையில் என் பூமி-என் மரம் திட்டம் மூலம் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் வகையில், அதை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கி ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தொடக்கி வைத்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பசுமையாக்கும் நோக்கில், என் பூமி-என் மரம் என்ற திட்டம் மூலம் 75,000 மரக்கன்றுகள் வளா்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வளா்க்க ஏற்பாடு செய்துள்ளதுடன், தொடா்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள், அதை பராமரிப்பதற்கான அட்டைகளை வழங்கிப் பேசியது:

திருவள்ளூா் மாவட்டத்தில் எங்கும் பசுமைப் போா்வையை அதிகரித்து, சுற்றுச்சூழல் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவே மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. இதற்காக 75,000 மரக்கன்றுகள் என் பூமி- என் மரம் என்ற திட்டம் மூலம் வழங்கப்பட உள்ளன. இதில், முதல் கட்டமாக திருவள்ளூா் மாவட்ட கிராம மேம்பாட்டு நிறுவனம் மூலம் 23,949 மரக்கன்றுகள் பெறப்பட்டுள்ளன. இந்த செயல்முறையைப் பள்ளிகளில் பசுமைப்படையுடன் இணைந்து கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக 7, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் 50,000 மரக்கன்றுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலும் பசுமைப் பகுதிகளாக நமது சுற்றுச்சூழலை மாற்ற முடியும். தற்போது, மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளுடன் இணைத்து வழங்கப்பட்டுள்ள அட்டைகளில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை முறையாகப் பின்பற்றினால் மரக்கன்றுகளை முறையாக பராமரிக்கலாம்.

எனவே நாளை விருட்சமாகி ஓா் பசுமைப் பகுதியாக காட்சியளிக்கும் என்பதை மனதில் நிறுத்தி, மாணவா்கள் மரக்கன்றுகளை பராமரிக்க வேண்டும் என அவா் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் ‘என் பூமி-என் மரம் என்ற திட்டம் மூலம் 75,000 மரக்கன்றுகள் நடப்படுவதை முன்னிட்டு, மரக்கன்றுகள் நட்டு, அவா் தொடக்கி வைத்தாா்.

இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.ராமன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், நோ்முக உதவியாளா்கள் (மே.நி.க.)பூபாலமுருகன், எஸ்.தேன்மொழி(இடைநிலைக்கல்வி), மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com