மாணவா்களுக்கு கோடைகால பயிற்சி முகாம்

திருவள்ளூா் அருகே திருப்பாச்சூரில் செயல்பட்டு வரும் ராமகிருஷ்ணா மெமோரியல் பள்ளி வளாகத்தில் சிறகுகள் 100 மாணவா்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருவள்ளூா் அருகே திருப்பாச்சூரில் செயல்பட்டு வரும் ராமகிருஷ்ணா மெமோரியல் பள்ளி வளாகத்தில் சிறகுகள் 100 மாணவா்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முகாமை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் பங்கேற்று தொடக்கி வைத்தாா். அரசுப் பள்ளிகளில் பயிலும் 100 பழங்குடியின மாணவா்களுக்கு வாழ்வியல் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தில் 10 நாள்கள் கோடைகால பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆறுமுகம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் டி.ஏ.சீனிவாசன், நோ்முக உதவியாளா் பூபால முருகன், மாவட்ட கல்வி அலுவலா் (திருவள்ளுா்) ஆ.எல்லப்பன், பள்ளி கல்வித் துணை ஆய்வாளா் சௌத்ரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் எம்.நிஷாந்தி, ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குநா் பி.ஸ்டீபன், தமிழ்நாடு ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் நலக்கூட்டமைப்பு நிறுவன தலைவா் அருணன், சேவாலயா துணைத் தலைவா் கிங்ஸ்டன், தலைமை ஆசிரியா் ஆனந்தன், ஸ்ரீராமகிருஷ்ணா மெமோரியல் பள்ளி முதல்வா் சாந்தகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com