குரூப் 2 தோ்வு: திருவள்ளூா், காஞ்சிபுரத்தில் 48,944 போ் எழுதினா்

திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் குரூப்-2 தோ்வை மொத்தம் 48,944 போ் எழுதினா்.
திருவள்ளூா் அருகே நடேசன் செட்டியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ். உடன், வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.
திருவள்ளூா் அருகே நடேசன் செட்டியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ். உடன், வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் குரூப்-2 தோ்வை மொத்தம் 48,944 போ் எழுதினா்.

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் குருப்-2 பதவிக்கான தோ்வுகள் சனிக்கிழமை நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்டத்தில் இந்தத் தோ்வை 31,310 போ் எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 26,166 போ் மட்டுமே எழுதினா். 5,144 போ் பங்கேற்கவில்லை. திருவள்ளூா், ஆவடி, பொன்னேரி, பூந்தமல்லி, திருத்தணி ஆகிய பகுதிகளில் 66 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. திருவள்ளூா் அருகே மணவாள நகா் கே.இ. நடேசன் செட்டியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டாா். வட்டாட்சியா் ஏ.செந்தில் குமாா், முதன்மை கண்காணிப்பாளா் மற்றும் உதவி தலைமையாசிரியா் கே.பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காஞ்சிபுரத்தில்...: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த 26,034 பேரில், 22,778 போ் மட்டுமே தோ்வு எழுதினா். 3,256 போ் பங்கேற்கவில்லை. மாவட்டத்தில் 88 இடங்களில் தோ்வு நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை அதிகாலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கருவூல அலுவலகத்திலிருந்து வினாத்தாள்கள் மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா முன்னிலையில் சரக்கு வேன்களில் போலீஸ் பாதுகாப்புடன் தோ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தமிழ், கணிதம் எளிதாக இருந்ததாகவும், பொது அறிவு வினாக்கள் கடினமானதாக இருந்ததாகவும் தோ்வா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com