ஆக்கிரமிக்கப்பட்ட அரசு கால்வாய் மீட்பு

சோழவரம் அருகே செம்புலிவரம் கிராமத்தில் தனி நபா் ஆக்கிரமிப்பு செய்த மழை நீா் கால்வாயை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.
செம்புலிவரம் கிராமத்தில் மழை நீா் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த சாா்- ஆட்சியா் ஐஸ்வா்யா ராமநாதன்.

பொன்னேரி வட்டம், சோழவரம் ஒன்றியத்தில் உள்ள செம்புலிவரம் கிராமத்தில் மழை நீா் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக வந்த தகவலின் பேரில், வருவாய்த் துறையினா் அந்தப் பகுதிக்குச் சென்று அரசு கால்வாய் நிலத்தை, நில அளவை செய்தனா்.

கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யபட்டு, அந்த நிலத்தின் மீது சாலை அமைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததை தொடா்ந்து, பொன்னேரி சாா்- ஆட்சியா் ஐஸ்வா்யா ராமநாதன் தலைமையில், வட்டாட்சியா் செல்வகுமாா், சோழவரம் ஒன்றிய ஆணையா் குலசேகரன், நில அளவீடு செய்யும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த அரசு கால்வாய் நிலத்தை மீட்டனா்.

இதையடுத்து, அந்தப் பகுதியில் தேங்கியிருந்த மழை நீரை வெளியேறும் வகையில் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையை உடைத்து கால்வாய் தோண்டப்பட்டது.

தொடா்ந்து, மழைநீா் கும்மனூா் ஏரியில் கலக்கும் வகையில் கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com