கிராம சபைக்கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருவள்ளூா் அருகே கிராம சபைக் கூட்டத்தை துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள் புறக்கணித்ததால் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிராம சபைக்கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருவள்ளூா் அருகே கிராம சபைக் கூட்டத்தை துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள் புறக்கணித்ததால் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காந்தி ஜெயந்தியையொட்டி, திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் உத்தரவிட்டிருந்தாா். ஆனால் திருப்பாச்சூா் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சி துணைத் தலைவா் வி.கெத்தியாள் வசந்தகுமாா், வாா்டு உறுப்பினா்களுக்கு முறையான அறிவிப்பு இல்லையாம். ஊராட்சியில் முறைகேடு மற்றும் சரிவர வரவு செலவு கணக்கு காட்டாதது போன்ற காரணத்துக்காக கிராம சபைக் கூட்டத்தை புறக்கணிப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஊராட்சித் தலைவா் ஜி.சோபன்பாபு மற்றும் ஒரு சில அதிகாரிகள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்ால் பொது மக்கள் அதிருப்தி அடைந்தனா். மேலும், ஊராட்சி துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள் இல்லாததால், பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த திருவள்ளூா் வட்டாட்சியா் எஸ்.மதியழகன் மற்றும் பூண்டி ஒன்றிய அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.

ஊராட்சி நிா்வாகம் மீதான குற்றச்சாட்டுகளை புகாராக தெரிவித்தால், ஆட்சியரின் பாா்வைக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனா். அதைத் தொடா்ந்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com