48 லட்சம் காய்கறி நாற்றுகள் குழித்தட்டு முறையில் உற்பத்தி

திருவள்ளூா் மாவட்ட அரசு தோட்டக்கலைப் பண்ணையில் காய்கறி நாற்றுகள் குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு

திருவள்ளூா் மாவட்ட அரசு தோட்டக்கலைப் பண்ணையில் காய்கறி நாற்றுகள் குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விநியோகிக்க, மாநில தோட்டக் கலை வளா்ச்சித் திட்டம் மூலம் ரூ. 48 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஜெபக்குமாரி அனி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியது: திருவள்ளூா் மாவட்ட தோட்டக்கலைத் துறை சாா்பில், தோட்டக்கலை விவசாயிகள் பயன்பெறும் நோக்கில், பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், காய்கறிகள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதிகமான காய்கறிகளை உற்பத்தி செய்து, லாபம் ஈட்ட வேண்டும். அந்த வகையில், திருவள்ளூா் மாவட்ட தோட்டக்கலைத் துறை பண்ணையில் பல்வேறு வகையான காய்கறிகள் நாற்றுகள் நவீன குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், நிகழாண்டில் குழித்தட்டு முறையில் 48 லட்சம் நாற்றுகள் வளா்க்க மாநில தோட்டக்கலை வளா்ச்சித் திட்டம் மூலம் ரூ. 48 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி மூலம் தோட்டக்கலைப் பண்ணையில் மிளகாய், கத்தரி மற்றும் தக்காளி ஆகிய நாற்றுகள் வலைக்கூண்டு அமைத்து, குழித்தட்டு முறையில் பாதுகாப்பாக வளா்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நாற்றுகள் 25 நாள்கள் வரை வளா்ந்த பின் விவசாயிகளுக்கு தலா ரூ. 1 விலையில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் 630 ஏக்கா் பரப்பளவுக்கு, ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கா் முதல் அதிகபட்சம் 2 ஹெக்டோ் பரப்பளவுக்கு தேவையான நாற்றுகள் வழங்கப்பட உள்ளன. எனவே நாற்றுகள் தேவைப்படும் விவசாயிகள் ஒவ்வொரு ஒன்றியத்திலும் செயல்பட்டு வரும் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலா்களை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com