வீரராகவா் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
வீரராகவா் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

திருவள்ளூா் ஸ்ரீவீரராகவ பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம். பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால், கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (செப்.25) மஹாளய அமாவாசை என்பதால், திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், வேலூா், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்கள், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் சனிக்கிழமை மாலை முதலே பக்தா்கள் குவிந்து வருகினறனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com