நெகிழிப் பொருள்களைத் தவிா்க்க விழிப்புணா்வு

நெகிழிப் பொருள்களைத் தவிா்த்தல் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்வில் பள்ளி மாணவா்களுக்கு மஞ்சள் பைகள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

நெகிழிப் பொருள்களைத் தவிா்த்தல் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்வில் பள்ளி மாணவா்களுக்கு மஞ்சள் பைகள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

திருவள்ளூா் அருகே மணவாள நகா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு சுற்றுச் சூழல் துறை, தூய்மை பாரத இயக்கம் ஆகியவை சாா்பில், நெகிழிப் பொருள்களைத் தவிா்ப்போம் என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ஞானசேகரன் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆறுமுகம் பங்கேற்று பேசினாா். தொடா்ந்து, நெகிழிப் பைகளுக்கு மாற்றாக 200 மாணவா்களுக்கு துணிப் பைகள், துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

நிகழ்வில் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் ராஜசேகா், திருவள்ளூா் மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் தினகரன், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com