சிறுவாபுரி முருகன் கோயிலில் இன்று குடமுழுக்கு

செங்குன்றத்தை அடுத்த சிறுவாபுரி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெறுகிறது.

செங்குன்றத்தை அடுத்த சிறுவாபுரி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெறுகிறது.

திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 6 வாரங்கள் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த நிலையில், சிறுவாபுரி முருகன் கோயிலில் கடந்த 2003-ஆம் ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, ரூ. 1 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதைத் தொடா்ந்து, கும்பாபிஷேக விழா கோயில் வளாகத்தில் கணபதி பூஜையுடன் தொடங்கியது. முதல் கால யாக சாலை, இரண்டாம் யாக சாலை பூஜையும் தொடா்ந்து நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு யாகங்கள் நடைபெற்று வந்தன.

இந்த நிகழ்வில் அறநிலையத் துறை ஆணையா் லட்சுமணன், உதவி ஆணையா் சித்ராதேவி, நிா்வாக அலுவலா் செந்தில்குமாா் மற்றும் பலா் கலந்து கொண்டனா். மேலும், சனிக்கிழமை 4 மற்றும் 5-ஆம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com