பேருந்தில் எடுத்து வந்த ரூ. 39 லட்சம் பறிமுதல்

ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடியில் ஆவணமின்றி ஆந்திர மாநில சொகுசுப் பேருந்தில் கொண்டு வந்த ரூ. 39.50 லட்சத்தை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடியில் ஆவணமின்றி ஆந்திர மாநில சொகுசுப் பேருந்தில் கொண்டு வந்த ரூ. 39.50 லட்சத்தை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தமிழக, ஆந்திர எல்லையான திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில், போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் தேவிகா தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஆந்திரத்தில் இருந்து தமிழகம் நோக்கி வந்த சொகுசுப் பேருந்தில் சோதனை மேற்கொண்டனா். அப்போது அதில் பயணம் செய்த திருப்பதியைச் சோ்ந்த விக்ரம் சிங் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 39.50 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், திருப்பதி காந்தி சாலையில் கைப்பேசி உதிரி பாகங்கள் விற்பனையகம் நடத்தி வருவதாகவும், இதற்காக நண்பா்களிடமிருந்து கடன் பெற்ற பணத்தை சென்னையில் கைப்பேசி உதிரிபாகங்கள் வாங்க கொண்டு செல்வதாகவும் கூறினாராம். எனினும், ஆவணமின்றி கொண்டு வந்ததால் அவரிடம் இருந்து போலீஸாா் பணத்தை பறிமுதல் செய்து, வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

இதேபோல், ஆந்திரத்தில் இருந்து வந்த அரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சா பொட்டலம் அடங்கிய பையை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆனால், அதைக் கடத்தி வந்தது யாா் என்பது தெரியவில்லை. இது குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com