பேராசிரியர் க.அன்பழகனின் திருவுருவச் சிலை பணிகளை ஆய்வு செய்த முதல்வர் 

மீஞ்சூரில் நடைபெற்று வரும், மறைந்த திமுக முன்னாள் பொதுச் செயலர் பேராசிரியர் க.அன்பழகனின் திருவுருவச் சிலை பணிகளை முதல்வர் ஸ்டாலின்  சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பேராசிரியர் க.அன்பழகனின் திருவுருவச் சிலை பணிகளை ஆய்வு செய்த முதல்வர் 

மீஞ்சூரில் நடைபெற்று வரும், மறைந்த திமுக முன்னாள் பொதுச் செயலர் பேராசிரியர் க.அன்பழகனின் திருவுருவச் சிலை பணிகளை முதல்வர் ஸ்டாலின்  சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திமுக முன்னாள் பொதுச்செயலர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, அவரது திருவுருவ வெண்கல சிலையை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் மீஞ்சூர் அருகே புதுப்பேடு கிராமத்தில் உள்ள சிற்பக்கலை கூடத்தில், அன்பழகன் முழு திருவுருவ வெண்கல சிலை வடிவமைக்கும் பணிகள்  நடைபெற்று வருகின்றன.

இப்பணியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு இன்று ஆய்வு செய்தார்.

அப்போது வெண்கலச் சிலையை செய்வதற்கான, மாதிரி களிமண் சிலையை பார்வையிட்டார். பின்னர், அதில் சில மாற்றங்கள் செய்து சிலையை வடிவமைக்கும் பணிகளை முடிக்குமாறு சிற்பக்கூட சிற்பி தீனதயாளன் குழுவினரிடம் முதல்வர் கேட்டுக் கொண்டார். முதல்வருடன், அமைச்சர் ஏ.வ.வேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகர், கோவிந்தராஜன் பொன்னேரி நகராட்சி தலைவர் மருத்துவர் பரிமளம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முதல்வர் வருகையை யொட்டி, ஆவடி காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். செங்குன்றத்தில் தொடங்கி மீஞ்சூர் புதுப்பேடு வரை 100க்கும் மேற்பட்டபோலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக புதுப்பேடு வந்த முதல்வரை, பொன்னேரி நகர, மீஞ்சூர் ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com