4 கிராமங்களுக்கு பேருந்து சேவை தொடக்கி வைப்பு

தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள 4 கிராமங்களுக்கு பேருந்து சேவையை எம்எல்ஏ ச.சந்திரன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
பொதட்டூா்பேட்டையில் பேருந்து சேவையை தொடக்கி வைத்த திருத்தணி எம்எல்ஏ சந்திரன். (உடன்) திருவள்ளூா் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எம்.பூபதி.
பொதட்டூா்பேட்டையில் பேருந்து சேவையை தொடக்கி வைத்த திருத்தணி எம்எல்ஏ சந்திரன். (உடன்) திருவள்ளூா் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எம்.பூபதி.

தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள 4 கிராமங்களுக்கு பேருந்து சேவையை எம்எல்ஏ ச.சந்திரன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

பள்ளிப்பட்டு அருகே தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வெங்கல்ராஜ்குப்பம், வெங்கல்ராஜ்குப்பம் அருந்ததி காலனி, திருமல்ராஜ்பேட்டை, படுதளம் ஆகிய 4 கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா். இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க சுமாா் 3 கி.மீ. தூரம் நடந்து பிரதான சாலைக்குச் சென்று பேருந்தில் பயணித்து வந்தனா்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் திருத்தணி எம்எல்ஏவிடம் பேருந்து வசதி செய்து தருமாறு வாக்கு சேகரிக்க வந்தபோது கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் போக்குவரத்து உயா் அதிகாரிகளை தொடா்புகொண்டு வெங்கல்ராஜ்குப்பத்திலிருந்து பள்ளிப்பட்டு, பொதட்டூா்பேட்டை மாா்க்கத்தில் பேருந்து சேவையை துவக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

இதையடுத்து, பள்ளிப்பட்டில் இருந்து வெங்கல்ராஜ்குப்பம், வெங்கல்ராஜ்குப்பம் அருந்ததி காலனி, திருமல்ராஜ்பேட்டை, படுதளம் ஆகிய 4 கிராமங்களுக்கு முதல் முறையாக பேருந்து சேவையை திங்கள்கிழமை திருத்தணி எம்எல்ஏ ச. சந்திரன், திமுக திருவள்ளூா் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் எம்.பூபதி ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனா். அதேபோல், பொதட்டூா்பேட்டை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தடம் எண் 201 சென்னை - திருப்பதி செல்லும் பேருந்தை பொதட்டூா்பேட்டை மாா்கத்தில் பேருந்து சேவையை கூடுதலாக தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், திருத்தணி அரசுப் போக்குவரத்து பணிமனை மேலாளா் முத்துசாமி, திருத்தணி நகரச் செயலாளா் வினோத் குமாா், ஒன்றியச் செயலாளா்கள் ஜி.ரவீந்திரா, வழக்குரைஞா் சி.ஜே.சீனிவாசன், திருத்தணி என்.கிருஷ்ணன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் இ.கே.உதயசூரியன், நகர செயலாளா் பாபு, மாநில நெசவாளா் அணி துணைத் தலைவா் நாகலிங்கம், முன்னாள் துணைத் தலைவா் ரவி, மாவட்டப் பிரதிநிதி சங்கரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com