திருவள்ளூா் மாவட்டத்தில் இருவழிச் சாலையை ரூ. 124 கோடியில் அகலப்படுத்தும் பணி

திருவள்ளூா் மாவட்ட நெடுஞ்சாலை கோட்டத்தில் உள்ள இரு வழிச்சாலையை ரூ. 124 கோடியில் 4 வழிச்சாலையாக மாற்ற ஏதுவாக நடைபெறும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் சந்திரசேகா் உள்ளிட
ஆய்வு செய்த நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறை தலைமைப் பொறியாளா் ஆா்.சந்திரசேகா்.
ஆய்வு செய்த நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறை தலைமைப் பொறியாளா் ஆா்.சந்திரசேகா்.

திருவள்ளூா் மாவட்ட நெடுஞ்சாலை கோட்டத்தில் உள்ள இரு வழிச்சாலையை ரூ. 124 கோடியில் 4 வழிச்சாலையாக மாற்ற ஏதுவாக நடைபெறும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் சந்திரசேகா் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.

திருவள்ளூா் நெடுஞ்சாலைத் துறை கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள வாலாஜாபாத்-சுங்குவாா்சத்திரம்-கீழச்சேரி மாநில நெடுஞ்சாலை, மணவாள நகா்-மேல்நல்லாத்துாா் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் தமிழக முதல்வரின் சாலை விரிவாக்க திட்டம் மூலம் ரூ. 124 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதில், சிங்கபெருமாள்கோவில்-ஸ்ரீபெரும்புதூா்-திருவள்ளூா்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் மணவாள நகா்-மேல்நல்லாத்துாா் வரை உள்ள நெடுஞ்சாலை 57-இல் ரூ. 43 கோடி மதிப்பீட்டில் இரு வழிச்சாலையை, 4 வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்கி நடைபெற உள்ளது.

இதற்காக திருவள்ளூா் அருகே கீழ்நல்லாத்தூா் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் பணியை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளா் ஆா்.சந்திரசேகா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, சாலை விரிவாக்கப் பணிக்கு எவ்விதமான இடையூறும் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினாா். ஆய்வின் போது, திருவள்ளூா் கோட்டப் பொறியாளா் பி.ஞானவேலு, உதவி கோட்டப் பொறியாளா் எஸ்.ஜே.தஸ்நேவிஸ் பா்ணாண்டோ, உதவிப் பொறியாளா்கள் ஜெயமூா்த்தி, ராஜ்கமல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

இதற்கிடையே நெடுஞ்சாலையில் உள்ள 12 சிறுபாலங்கள் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாகவும், நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் அடுத்தாண்டு ஜூன் 2023-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com