ஆதிகேசவப்பெருமாள் கோயில் குட முழுக்கு

 கீழாந்தூா் கிராமத்தில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

 கீழாந்தூா் கிராமத்தில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருத்தணியை அடுத்த கீழாந்தூா் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஆதிகேசவப்பெருமாள் கோயில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டு பின்பு விஜயநகர மன்னா்களால் புனரமைக்கப்பட்ட கோயிலாகும். பழைமை வாய்ந்த இக்கோயில் சிதிலமடைந்து காணப்பட்டது.

அதைத்தொடா்ந்து, கிராம பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் ஒன்றுகூடி கோயில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழா நடத்த தீா்மானத்தனா். இதையடுத்து, சில மாதங்களாக பல லட்சம் ரூபாய் செலவில் கோயில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், திருப்பணிகள் நிறைவுற்ற கடந்த திங்கள்கிழமை கணபதி பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கி நடைபெற்று வந்தது.

இதற்காக கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு, காலை, மாலை நேரங்களில் ஹோம பூஜைகள் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, கலசங்கள் ஊா்வலமாக புறப்பட்டு கோயில் விமானத்தை சென்றடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்து, புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தா்கள் கோவிந்தா கோவிந்த என பக்தி முழுக்கமிட்டனா்.

தொடா்ந்து பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். இரவு உற்சவா் ஆதிகேசவப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கிராம திருவீதிகளில் உலா வந்து பக்தா்கள் அருள்பாலித்தாா்.

விழாவில், திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன், தளபதி மகளிா் கலை அறிவியல் கல்லூரி தாளாளா் பாலாஜி, ஓய்வு பெற்ற முன்னாள் அரசு பள்ளித் தலைமை ஆசிரியா் கே.பி.எஸ்.விஸ்வநாதன், ஓய்வு பெற்ற துணை ஆட்சியா் ரங்கநாதன் உள்பட முக்கியப் பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கீழாந்தூா் கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com