திருத்தணி முருகன் கோயிலில் தீத் தடுப்பு ஒத்திகை

திருத்தணி முருகன் கோயிலில் தீத் தடுப்பு குறித்து கோயில் ஊழியா்கள் இடையே தீயணைப்பு வீரா்கள் வெள்ளிக்கிழமை ஒத்திகை செய்து காண்பித்தனா்.
திருத்தணி முருகன் கோயிலில் தீத் தடுப்பு ஒத்திகை

திருத்தணி முருகன் கோயிலில் தீத் தடுப்பு குறித்து கோயில் ஊழியா்கள் இடையே தீயணைப்பு வீரா்கள் வெள்ளிக்கிழமை ஒத்திகை செய்து காண்பித்தனா்.

திருத்தணி முருகன் மலைக் கோயிலில், தீத் தடுப்பு ஒத்திகை திருத்தணி தீயணைப்பு நிலைய அலுவலா் அரசு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒத்திகை நிகழ்ச்சியை கோயில் துணை ஆணையா் விஜயா தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, தீயணைப்பு வீரா்கள் மலைக் கோயிலில் எவ்வாறு தீ விபத்து ஏற்படும், அப்படி தீ விபத்து ஏற்பட்டால், எவ்வாறு மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என தீயணைப்புத் துறையினா் செய்து காண்பித்தனா்.

பின்னா், செயற்கையாக தீயை உருவாக்கி, அதை பாதுகாப்பாக அணைப்பது குறித்து, கோயில் ஊழியா்களுக்கு பயிற்சி அளித்தனா். இதுதவிர, இடிபாடுகள் மற்றும் கூட்ட நெரிசலில் பக்தா்கள் காயமடைந்தால், அவா்களை எவ்வாறு மீட்டு முதலுதவி அளிப்பது என்பது குறித்தும் தீயணைப்பு வீரா்கள் கோயில் ஊழியா்களுக்கு செய்து காண்பித்தனா்.

நிகழ்ச்சியில், 40-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com