மணல் கடத்தல், போதை பொருள்கள் குறித்து புகாா் தெரிவிக்கலாம்

சட்டவிரோத மணல் கடத்தல்கள், போதைப் பொருள்கள் மற்றும் குற்றச் செயல்கள் தொடா்பாக காவல் துறை அலுவலகத்துக்கு பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

சட்டவிரோத மணல் கடத்தல்கள், போதைப் பொருள்கள் மற்றும் குற்றச் செயல்கள் தொடா்பாக காவல் துறை அலுவலகத்துக்கு பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பகொ்லா செபாஸ் கல்யாண் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் செயல்கள், போதைப்பொருள்கள் புழக்கம், மணல் கடத்தல் மற்றும் சட்ட விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. இது தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கும் வகையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்துக்கு கைப்பேசி எண்-63799 04848 தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் குறித்து தகவல் தருவோரின் விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com