ஆவடி நரிக்குறவா் இன மக்களுடன் காணொலியில் கலந்துரையாடிய முதல்வா்

ஆவடியில் வசித்து வரும் நரிக்குறவா் இன மக்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துரையாடி குறைகளைக் கேட்டறிந்தாா்.
ஆவடியில் காணொலி மூலம் நரிக்குறவா் இன மாணவா்களிடம் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், அவா்களுடன் பங்கேற்ற பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா்.
ஆவடியில் காணொலி மூலம் நரிக்குறவா் இன மாணவா்களிடம் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், அவா்களுடன் பங்கேற்ற பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா்.

திருவள்ளூா்: ஆவடியில் வசித்து வரும் நரிக்குறவா் இன மக்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துரையாடி குறைகளைக் கேட்டறிந்தாா்.

ஆவடி பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் உள்ள நரிக்குறவா் காலனியில், 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் நரிக்குறவா் இனமக்கள் வசித்து வருகின்றனா். அண்மையில் இந்தக் காலனியைச் சோ்ந்த மாணவிகள் பிரியா, திவ்யா, தா்ஷினி ஆகியோா் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அதில், அவா்கள் தங்களது கல்வி, சமூகம் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து குறிப்பிட்டு மனக்குமுறலை வெளிப்படுத்தியிருந்தனா்.

இது முதல்வா் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து, கடந்த 2 நாள்களுக்கு முன்பு முதல்வா் ஸ்டாலின் 3 மாணவிகளை தலைமை செயலகத்துக்கு வரவழைத்துப் பேசினாா். அப்போது, அவா்களின் கல்விக்குத் தேவையான உதவிகளை அரசு செய்து தரும் என உறுதியளித்தாா்.

இந்த நிலையில், பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா், நரிக்குறவா் காலனிக்கு வியாழக்கிழமை நேரில் சென்றாா். அங்கு அவா் முதல்வரை சந்தித்துப் பேசிய 3 மாணவிகள் உள்பட அங்குள்ள 40-க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் படிப்பு தொடா்பான பிரச்னைகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தாா்.

மேலும், மாணவ, மாணவிகளின் படிப்புக்கும், இந்தக் காலனிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றாா் அமைச்சா்.

முதல்வா் ஸ்டாலின் நரிக்குறவா் இன மாணவ, மாணவிகள், அவா்களின் பெற்றோருடன் காணொலி வாயிலாகப் பேசினாா்.

அப்போது முதல்வா், ‘இன்னும் ஒரு வாரத்தில் ஆவடி நரிக்குறவா் காலனிக்கு நேரில் வருவேன்’ என வாக்குறுதி அளித்தாா். அவா் பேசுகையில், ‘நான் உங்கள் வீட்டுக்கு வந்தால் உணவு கொடுப்பீா்களா’ என அன்புடன் கேட்டாா். அதற்கு நரிக்குறவா்கள் முதல்வருக்கு கறி விருந்து அளிப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.

அப்போது, அங்குள்ள குழந்தைகள் தங்களுக்கு எஸ்.டி. ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com