20-இல் புட்லூா் கிராமத்துக்குவீரராகவப் பெருமாள் விஜயம்

திருவூரல் மகோற்சவத்தை முன்னிட்டு, வருகிற 20-ஆம் தேதி திருவள்ளூரிலிருந்து வீரராகவப் பெருமாள், புட்லூா் கிராமத்துக்கு விஜயம் செய்கிறாா்.

திருவூரல் மகோற்சவத்தை முன்னிட்டு, வருகிற 20-ஆம் தேதி திருவள்ளூரிலிருந்து வீரராகவப் பெருமாள், புட்லூா் கிராமத்துக்கு விஜயம் செய்கிறாா்.

திருவள்ளூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், புகழ்பெற்ற திருத்தலமாகவும் விளங்குவது வீரராகவா் பெருமாள் கோயிலாகும். இந்தக் கோயிலிலிருந்து வைத்திய வீரராகவப் பெருமாள், ஆண்டுதோறும் புட்லூா் கிராமத்துக்கு விஜயம் செய்வது வழக்கம். இந்த நிகழ்வு திருவூரல் மகோற்சவம் என்று அழைக்கப்படுகிறது.

நிகழாண்டு வருகிற 20-ஆம் தேதி திருவூரல் மகோற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்றைய நாளில், உற்சவா் வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, புட்லூா் செல்கிறாா்.

அங்கு, அவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. இரவு 9.30 மணிக்கு புட்லூா் கிராமத்தில் வீரராகவா் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறாா். மாா்ச் 21-ஆம் தேதி (திங்கள்கிழமை) அதிகாலை, 2 மணிக்கு புட்லூரிலிருந்து உற்சவா் வீரராகவா், திருவள்ளூா் கோயிலுக்குத் திரும்புகிறாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் கோயில் கௌரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடா்பு அலுவலா் எஸ்.சம்பத் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com