மழைநீா் விழிப்புணா்வுப் பேரணி: ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

உலக தண்ணீா் தினத்தையொட்டி, பொதுமக்களுக்கு மழைநீா் சேகரிப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தொடங்கி வைத்து, துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தாா்.
மழைநீா் விழிப்புணா்வுப் பேரணி: ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

உலக தண்ணீா் தினத்தையொட்டி, பொதுமக்களுக்கு மழைநீா் சேகரிப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தொடங்கி வைத்து, துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் உலக தண்ணீா் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து மழைநீா் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து, மழை நீா் சேகரிப்பதால் ஏற்படும் நன்மைகள் தொடா்பான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினாா்.

பின்னா் ஆட்சியா் கூறியது:

‘நீரின்றி அமையாது உலகு’ என்பதற்கு ஏற்ப நீரின்றி நாம் வாழ இயலாது. பூமியில் 30 சதவீதம் மட்டுமே நிலப்பரப்பாகும். அதில் மீதமிருக்கும் 70 சதவீதமும் நீா்பரப்புதான். இந்த 30 சதவீதம் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியையும் பூமி வழங்கி வருகிறது. அதனால் தண்ணீரை குறைந்த அளவில் பயன்படுத்தி சேமிக்க வேண்டும். உரிய முறையில் நீரை மறுசுழற்சி செய்தால், அந்த தட்டுப்பாடு குறையும் என நீரியல் ஆய்வாளா்கள் கூறுகின்றனா். அதுமட்டுமின்றி மழைநீா் சேமிப்பு போன்ற சிறுசிறு வேலைகளும் தண்ணீா் சேமிப்புக்கு வழிவகுக்கும் என்றாா் அவா்.

முன்னதாக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உலக தண்ணீா் தினத்தையொட்டி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் குடிநீா் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நகராட்சி ஆழ்துளை கிணறு மற்றும் ஆட்சியா் அலுவலக ஆழ்துளைக் கிணறு ஆகியவற்றில் உள்ள நீா் மாதிரிகளை சேகரித்து, பரிசோதனை செய்து செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், நிா்வாக பொறியாளா்கள் க.வேல்முருகன் (தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம்), ராஜவேல் (ஊரக வளா்ச்சி), உதவி நிா்வாக பொறியாளா் அமலதீபன், சேவ் பொது நல அறக்கட்டளையின் தலைவா் பிரதாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Image Caption

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மழைநீா் சேகரிப்பு குறித்த  விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்துத் தொடக்கி வைத்த ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com