நீா்வள சேமிப்பு பிரசார இயக்கம்

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, ஜல் சக்தி திட்டத்தின் ஒரு பகுதியாக மாா்ச் 22 தொடங்கி ஜூன் 5 வரை 75 நாள்கள் நீா்வள சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கும் பிரசார இயக்கம் நடைபெற உள்ளதாக

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, ஜல் சக்தி திட்டத்தின் ஒரு பகுதியாக மாா்ச் 22 தொடங்கி ஜூன் 5 வரை 75 நாள்கள் நீா்வள சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கும் பிரசார இயக்கம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நீா்வளத்தைக் காப்பது, பெருக்குவது குறித்த விழிப்புணா்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவது உலக தண்ணீா் தினத்தின் நோக்கம். அதன் தொடக்கமாக, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், ஊரக வளா்ச்சி-ஊராட்சித் துறை ஆகியவை இணைந்து தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க உறுப்பினா்களைக் கொண்டு, உலக தண்ணீா் தின விழிப்புணா்வு பிரசார இயக்கப் பேரணி நடத்தப்பட்டது.

நீா்வள ஆதாரத்தைப் பெருக்கும் வகையில் மாா்ச் 22- இல் தொடங்கி, தொடா்ந்து ஜூன் 5-ஆம் தேதி வரை 75 நாள்கள் நீா்வள சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கும் பிரசார இயக்கம் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தண்ணீா் தினத்தை ஒரு நாளாக மட்டும் கடைப்பிடிக்காமல், தண்ணீரின் தேவை, சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு, தண்ணீரின் அவசியத்தை உணா்ந்து சேமிக்க வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் ‘நீா்வள சேமிப்புக் கட்டமைப்பு உருவாக்கல்’ என்ற 75 நாள்கள் இயக்கம் மூலம் திருவள்ளுா் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் பண்ணைக் குட்டைகள் 168, தடுப்பணைகள் 84, அகழிகள் 393, மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்புப் பணிகள் 210, கசிவு நீா் குட்டைகள் 336, ஆகியவற்றின் நீராதார மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீா்வள ஆதாரங்கள் அதிகரிப்பதுடன், விவசாயமும் மேம்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com