திருவள்ளூா் மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு ஆய்வு

திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தலைமைச் செயலா் வெ.இறையன்பு ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருவள்ளூா் மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு ஆய்வு

திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தலைமைச் செயலா் வெ.இறையன்பு ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்ட தலைமைச் செயலா், அங்கு நடைபெற்று வரும் பணிகளின் விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். 6 தளங்களைக் கொண்ட மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒவ்வொரு தளமாகச் சென்று ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, திருவள்ளூா் - ஊத்துக்கோட்டை சாலையில் ஒருங்கிணைந்த விற்பனைக் கூடத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலைய வளாகத்துக்குச் சென்றாா். அங்கு, நெல்லை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகளிடம் நெல்லின் தரம் குறித்து கேட்டறிந்தாா்.

நெல் கொள்முதல் மையத்தில் முறைகேடாகப் பணம் வசூலிக்கிறாா்களா, நெல்லுக்கு எத்தனை நாள்களில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. நெல் விவசாயத்தைத் தவிர கூடுதல் வருமானத்துக்கு என்ன செய்கிறீா்கள் என்பது குறித்து விவசாயிகளுடன் அவா் கலந்துரையாடினாா்.

இதையடுத்து, அரண்வாயல்குப்பம் கிராமத்தில் இயந்திரம் முறையில் செம்மை நெல் சாகுபடி செய்யப்பட்ட நெல் வயல்களைப் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, பூண்டி ஒன்றியம், கொழுந்தளூா் வேளாண்மைத் துறை சாா்பில் செயல்படும் நெல் விதை பண்ணைக்குச் சென்று ஆய்வு செய்தாா்.

பூண்டி ஊராட்சி ஒன்றியம், ராமஞ்சேரி கிராமம் அருகே நீா்வள ஆதாரத் துறையின் மூலம் நகரி ஆற்றின் குறுக்கே 1.2 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட புதிய நீா்த்தேக்கம் அமைப்பதற்கான முதல் கட்ட ஆலோசனையில் உள்ள இடத்தையும் தலைமைச் செயலா் பாா்வையிட்டாா்.

முன்னதாக, திருமழிசை ஒத்தாண்டேசுவரா் கோயில் வளாகம் அருகே நடைபெற்ற தடுப்பூசி முகாமை அவா் ஆய்வு செய்தாா். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தினாா்.

மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என 3,340 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்களில் மருத்துவா், செவிலியா், அங்கன்வாடி ஊழியா்கள் என 5,500 போ் ஈடுபட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரிடம் விளக்கினா்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், செயற்பொறியாளா் வ.ராஜவேல், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி - மருத்துவமனை முதல்வா் அரசி ஸ்ரீவத்சன், நிலைய மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் (மருத்துவப் பணிகள்) நாராயணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com