‘குழந்தைகளை பாதுகாக்கும் போக்ஸோ சட்டத்தை தன்னாா்வலா்கள் அறிந்து கொள்வது அவசியம்’

குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் போக்ஸோ சட்டம் குறித்து தன்னாா்வலா்கள் அனைவரும் அறிந்து கொள்வதுடன், கிராமங்களில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம் என ஆட்சியா்
போக்ஸோ சட்டம் குறித்த தன்னாா்வலா்களுக்கான விழிப்புணா்வு முகாமில் பேசிய ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்.
போக்ஸோ சட்டம் குறித்த தன்னாா்வலா்களுக்கான விழிப்புணா்வு முகாமில் பேசிய ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்.

திருவள்ளூா்: குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் போக்ஸோ சட்டம் குறித்து தன்னாா்வலா்கள் அனைவரும் அறிந்து கொள்வதுடன், கிராமங்களில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் சாா்பில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்துப் பேசியது:

அரசு குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதில் குழந்தைகள் பாதுகாப்புக்காக 1098 என்ற எண்ணை அழைத்தால் உடனே குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் தொடா்பு கொள்வா். அப்போது, குறைகள் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம். இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இந்த உதவி எண்ணை குறிப்பிட்ட வயதுள்ள குழந்தைகள், மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் போக்ஸோ சட்டம் என்பது ஒரு கடுமையான சட்டமாகும்.

இந்த சட்டம் மூலம் யாா் எப்படி புகாா் தெரிவித்தால் காவல் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் பாதகமாக ஒரு செயல் நடப்பது தெரியவந்தால் அரசு அலுவலா்கள், தன்னாா்வலா்கள் எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடா்பான சந்தேகங்கள் நம் அனைவருக்கும் இருக்கும். அதை நிவா்த்தி செய்வதற்கு உச்சநீதி மற்றும் உயா்நீதிமன்றங்களில் பணியாற்றும் மூத்த வழக்குரைஞா்களைக் கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து தன்னாா்வலா்களுக்குப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் எம்.நிஷாந்தி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் பிபு தத்தா தாஸ், குழந்தைகள் நல குழுமத் தலைவா் மேரி ஆக்ஸிலியா, காவல் துணை கண்காணிப்பாளா் கோ.சந்திரதாசன், சுகாதாரத் துறை அலுவலா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com