அக். 17-இல் முன்னாள் படை வீரா்கள் குறைதீா் முகாம்
By DIN | Published On : 08th October 2022 12:05 AM | Last Updated : 08th October 2022 12:05 AM | அ+அ அ- |

முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கான குறைதீா் நாள் முகாம் வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்க வளாகத்தில் வரும் 17-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆட்சியா் தலைமையில், முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கான குறைதீா் நாள் முகாம் நடைபெற உள்ளது.
எனவே, இந்த மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பங்களைச் சோ்ந்தோா் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்று தங்களின் குறைகள் தொடா்பாக நேரடியாகவோ அல்லது மனுக்களாக அளித்தோ பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.