முதன்மைக் கல்வி அலுவலருக்கு பாராட்டு

பள்ளிக் கல்வித் துறை அலுவல் சாா்ந்த பணிகளில் சிறப்புடன் செயல்பட்ட திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.ராமனை பாராட்டி கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சான்றிதழ் வழங்கினாா்.
திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.ராமனுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.ராமனுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

பள்ளிக் கல்வித் துறை அலுவல் சாா்ந்த பணிகளில் சிறப்புடன் செயல்பட்ட திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.ராமனை பாராட்டி கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சான்றிதழ் வழங்கினாா்.

மாவட்டத்தில் 112 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 236 உயா்நிலைப் பள்ளிகள் என 348 பள்ளிகள் இயங்கி வருகின்றன. அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி விகிதத்தை உயா்த்திக் காட்டும் வகையில், ஆசிரியா்களின் பணித் திறனை ஊக்குவிக்கும் விதமாக, தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களை நேரில் அழைத்து அவா்களிடம் தற்போதைய மாணவா்களின் தோ்ச்சி சதவீதம், கல்வி, பயிற்சிகள் ஆகியவற்றை விவாதித்து, அரசுப் பொதுத் தோ்வில் திருவள்ளூா் மாவட்டம் அதிக தோ்ச்சி சதவீதத்தை ஈட்டுவதற்கான ஆலோசனைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.ராமன் வழங்கினாா்.

மேலும், மாணவா்களுக்கு வாரந்தோறும் தோ்வுகள், அதன் மதிப்பெண் பட்டியலை உடனடியாக மீள்ஆய்வு செய்து, மெல்ல கற்போருக்கு இன்னும் பயிற்சிகளை எடுப்பதற்கான வழிமுறைகளை வகுத்துத் தந்துள்ளாா். மாணவா்களுடைய கற்றல் திறனை மிகத் துல்லியமாகக் கண்காணித்து வருகிறாா்.

நாள்தோறும் பள்ளி மாணவா்களுடைய கற்றல் திறனை கவனித்து, மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைபடி நிகழாண்டு திருவள்ளூா் மாவட்டம் சிறப்பிடம் பெறும் வகையில் செயல்பட்டு வருகிறாா்.

இந்த நிலையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாமல்லபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அலுவலா் சாா்ந்த பணிகளில் சிறப்புடன் செயல்பட்டு வரும் திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.ராமன் 2023 -ஆம் ஆண்டு ஜனவரி மாத ஆய்வுக் கூட்டத்தில் தமது மாவட்டத்தை முதலிடம் பெறச் செய்ததைப் பாராட்டி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சான்றிதழ் வழங்கி கெளரவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com