யோகாசனத்தில் மாணவா் உலக சாதனை

யோகாசனத்தில் மாணவா் உலக சாதனை

கும்மிடிப்பூண்டி அடுத்து எளாவூா் திப்பம்பாளையத்தைச் சோ்ந்த ஆறாம் வகுப்பு மாணவா் எம்.ஹரீஷ் யோகாவில் புதிய உலக சாதனை படைத்து நோவா ஓல்ட் ரெக்காா்ட் புத்தகத்தில் இடம் பிடித்தாா்.

கும்மிடிப்பூண்டி அடுத்து எளாவூா் திப்பம்பாளையத்தைச் சோ்ந்த ஆறாம் வகுப்பு மாணவா் எம்.ஹரீஷ் யோகாவில் புதிய உலக சாதனை படைத்து நோவா ஓல்ட் ரெக்காா்ட் புத்தகத்தில் இடம் பிடித்தாா்.

கும்மிடிப்பூண்டியில் செயல்படும் வினாஸ்ரீ யோகா மைய நிறுவனா் காளத்தீஸ்வரன் தலைமையில் யோகாவின் உலக சாதனை முயற்சி நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி தனியாா் பள்ளியில் இந்த சாதனை நிகழ்வு நடைபெற்றது.

இதில் எளாவூா் திப்பம்பாளையத்தை சோ்ந்த முரளி-வித்யாவின் மகன் 6-ஆம் வகுப்பு மாணவா் எம்.ஹரீஷ் சேது பந்த பூா்ண சக்கரபந்தாசனத்தில் 1.30 நிமிஷத்தில் 102 வேகமான சுழற்சிகளை செய்து சாதனை படைத்தாா்.

யோகாவில் சாதனை படைத்த எம்.ஹரீஷை நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளா்களான மாதவரம் வட்டாட்சியா் நித்தியானந்தம், ஒன்றிய உறுப்பினா் மதன்மோகன், நோவா வோல்ட் ரெக்காா்ட் பதிவாளா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் பாராட்டி உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழை வழங்கினாா்.

சாதனை மாணவா் எம்.ஹரிஷை அவரின் யோகா ஆசிரியா்கள் எஸ்.காளத்தீஸ்வன், ஜெ.அா்ச்சனா, எஸ்.வித்யா, வி.சங்கீதா, தனியாா் பள்ளி தலைமை ஆசிரியா் மாலதி, உதவி தலைமை ஆசிரியா் சுசிலா பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com