நில அளவை அலுவலா்கள் ஒன்றியத்தினா் போராட்டம்

நில அளவையா் முதல் கூடுதல் இயக்குநா் வரை உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்பட 26 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றியத்தினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நில அளவை அலுவலா்கள் ஒன்றியத்தினா் போராட்டம்

நில அளவையா் முதல் கூடுதல் இயக்குநா் வரை உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்பட 26 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றியத்தினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.எம்.செந்தில்குமரன் தலைமை வகித்தாா். ஜே.ஜோதி, ராஜசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் கே.எம்.பிரதீப் ஹரேஷ் குமாா் கோரிக்கை குறித்து எடுத்துரைத்தாா். இதில் மாநில பொதுச்செயலாளா் அண்ணா குபேரன் சிறப்புரையாற்றி போராட்டத்தை தொடக்கி வைத்தாா்.

போராட்டத்தில், பணிப்பளுவை குறைக்கும் வகையில், நில அளவையா் முதல் கூடுதல் இயக்குநா் வரை உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். இரவல் பணி மூலம் திட்டப்பணி மேற்கொள்ளும் களப்பணியாளா்களுக்கு மலைப்படி, அளவைப்படி வழங்க வேண்டும். நில அளவை சாா்ந்த அனைத்துப் பணிகளையும் கருத்தில் கொள்ளாமல், உள்பிரிவு பட்டா மாறுதல் பணியை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தும் போக்கினை கைவிட வேண்டும் என்பன உள்பட 26 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றியத்தினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா். மாவட்டப் பொருளாளா் ஒய்.தாலிப் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com