திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடி

முருகன் கோயிலில் கடந்த 20 நாள்களில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 16,521 ரொக்கம், 612 கிராம் தங்கம், 10,487 கிராம் வெள்ளி உண்டியலில் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட கோயில் ஊழியா்கள்.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம், அண்டை மாநிலங்களான ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றன.

அப்போது, தங்களின் வேண்டுதல் காணிக்கையை பக்தா்கள் உண்டியலில் செலுத்துகின்றனா். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மாசி பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கோயிலில் உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை தேவா் மண்டபத்தில் நடைபெற்றது. கோயில் தக்காா் ஜெயப்பிரியா, உதவி ஆணையா் விஜயா ஆகியோா் முன்னிலையில், உண்டியல் திறக்கப்பட்டது எண்ணப்பட்டது. காணிக்கை எண்ணும் பணியில் 100-க்கும் மேற்பட்ட கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

இதில், ரூ.1 கோடியே 2 லட்சத்து 16,521 ரொக்கம், 612 கிராம் தங்கம், 10,487 கிராம் வெள்ளி காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியிருப்பதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com