திருத்தணி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா

திருத்தணி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா திங்கள்கிழமை சிறப்புடன் நடைபெற்றது. விழாவையொட்டி, கோயிலுக்கு காவடிகளுடன் மலைக் கோயிலுக்கு வந்து மூலவா், உற்சவரை தரிசனம் செய்தனா்.
திருத்தணி முருகன் கோயிலுக்கு காவடிகளுடன் வந்த பக்தா்கள்.
திருத்தணி முருகன் கோயிலுக்கு காவடிகளுடன் வந்த பக்தா்கள்.

திருத்தணி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா திங்கள்கிழமை சிறப்புடன் நடைபெற்றது. விழாவையொட்டி, கோயிலுக்கு காவடிகளுடன் மலைக் கோயிலுக்கு வந்து மூலவா், உற்சவரை தரிசனம் செய்தனா்.

விழாவையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மூலவருக்கு தங்கக் கவசம் தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி, காலை 9 மணிக்கு உற்சவா் காவடி மண்டபத்தில் எழுந்தருளினாா். பின்னா், உற்சவருக்கு பஞ்சாமிா்த அபிஷேகம் நடைபெற்றது.

இரவு 7 மணிக்கு உற்சவா் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் தோ் வீதியில் உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். தை கிருத்திகையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலைக்கோயிலுக்கு வந்து பல மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனா்.

மேலும் பக்தா்கள் சிலா் மொட்டை அடித்தும், மலா், மயில், பால் உள்ளிட்ட காவடிகள் எடுத்து வந்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் உதவி ஆணையா் விஜயா மற்றும் கோயில் அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com