சாலை வசதியின்றி பொதுமக்கள் ஏரி வழியாக நடந்து செல்லும் அவலம்

கடம்பத்தூா் அருகே சாலை வசதியின்றி தண்ணிா் நிரம்பிய ஏரிக்குள் பொதுமக்கள் ஆபத்தான நிலையில் கடந்து செல்வதாக ஒன்றியக் குழு கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.
சாலை வசதியின்றி பொதுமக்கள் ஏரி வழியாக நடந்து செல்லும் அவலம்

கடம்பத்தூா் அருகே சாலை வசதியின்றி தண்ணிா் நிரம்பிய ஏரிக்குள் பொதுமக்கள் ஆபத்தான நிலையில் கடந்து செல்வதாக ஒன்றியக் குழு கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூா் ஒன்றியக் குழு கூட்டம் தலைவா் சுஜாதா சுதாகா் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் சரஸ்வதி ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லதா, சாந்தி ஆகி முன்னிலை வகித்தனா். இதில், அதிகாரிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நடந்த விவாதம்:

ஹரிதரன்: கடம்பத்தூா் ஊராட்சிஆஞ்சநேய நகா் ஏரிக்கரையோரம் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலை வசதியில்லாததால் தண்ணீா் நிரம்பிய ஏரியில் ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றனா்.

வெங்கடேசன்: வெங்கத்தூா் ஊராட்சியில் 10,000-க்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். திருமண அரங்குகள், ஹோட்டல்கள், சாலையோர உணவகங்களில் உற்பத்தியாகும் திடக்கழிவுகளை மேம்படுத்த அங்கு ஏற்கெனவே ரூ. 30 லட்சத்தில் தொடங்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

தலைவா் சுஜாதா சுதாகா்: உறுப்பினா்கள் தெரிவித்த பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து குறைகளை நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கிராமங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை குழு உறுப்பினா்கள் தோ்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு, விவாதம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com