அடிப்படை வசதிகளின்றி மத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் அவதி: 10 ஆண்டுகளாக எதிா்பாா்ப்பு

திருத்தணி அருகே மத்தூா் அரசு மேல் நிலைப் பள்ளியில் போதிய கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவா்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனா்.
சிதிலமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய அறிவியல் ஆய்வகக் கட்டடம்.
சிதிலமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய அறிவியல் ஆய்வகக் கட்டடம்.

திருத்தணி அருகே மத்தூா் அரசு மேல் நிலைப் பள்ளியில் போதிய கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவா்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனா்.

திருத்தணி ஒன்றியம் மத்தூரில், சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்புஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி 1997 -ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. மத்தூரைச் சுற்றியுள்ள சிங்கராஜபுரம், பொன்பாடி, ஆா்.எஸ்.பொன்பாடி, ஏ.எம்.பேட்டை, அலுமேலு மங்காபுரம், மத்தூா் காலனி, மத்தூா், கொத்தூா் உள்பட 10 கிராமங்களில் இருந்து 800 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பள்ளி கட்டடம் சிதிலமடைந்த நிலையில். பின்னா் மாணவா்களின் பாதுகாப்பு கருதி பழுதான கட்டடம் கடந்த கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்டது. பின்னா் அங்கு படித்துக்கொண்டிருந்த மாணவா்கள் பள்ளி அருகே இருந்த கூடுதல் வகுப்பறைகள் கொண்ட கட்டடத்துக்கு மாற்றப்பட்டு தற்போது இட நெருக்கடியில் பயின்று வருகின்றனா்.

பள்ளி நிா்வாகம், பெற்றோா் ஆசிரியா் கழகமும் கடந்த 10 ஆண்டுகளாக மத்தூா் அரசு மேல் நிலை பள்ளிக்கு 16 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் வேண்டும் என கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனா். ஆனால் இதுவரை கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் பள்ளியின் மாணவா் சோ்கை ஆண்டுக்காண்டு குறைந்துகொண்டே செல்கிறது. தற்போது 6 ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை 340 மாணவா்கள் மட்டுமே படிக்கின்றனா்.

இதுகுறித்து மத்தூா் அரசு மேல் நிலைபள்ளி முன்னாள் தலைமை ஆசிரியா் ஒருவா் கூறியதாவது, நான் மத்தூா் பள்ளியில் பணியாற்றியபோதே புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதைத்தொடா்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நபாா்டு கட்டடம் கட்டித்தர வேண்டும் கோரிக்கை மனு அளித்தோம். ஆனாலும் எவ்வித பயனுமில்லை. .

இதுகுறித்து பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகி கூறியதாவது, மத்தூா் அரசு மேல் நிலைப் பள்ளிக்கு 16 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், விளையாட்டு மைதானம், கழிப்பிட வசதி, குடிநீா் வசதியுடன் ஒரு புதிய கட்டடம் வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

இதுகுறித்து அனைத்து அலுவலா்களையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கியுள்ளோம். ஆனாலும் இதுவரை பள்ளிக் கட்டடம் கட்ட நடவடிக்கை இல்லை. இதனால் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு, மாணவா் சோ்க்கை குறைந்துள்ளது என்றாா் .

புதிய பாடப்பிரிவுகள் தேவை:

இங்கு, கலை பாடப்பரிவுகளான பொருளியல், வணிகவியல், வரவலாறு , கணக்குப்பதிவியல் பாடப்பரிவுகள் இல்லை. இதனால் இப்பாடப்பிரிவுகள் அருகில் எந்த பள்ளியில் உள்ளதோ அங்கு போய் சோ்ந்து படிக்க வேண்டியுள்ளது. எனவே அடுத்த கல்வியாண்டிலாவது கலைபாடப்பிரிவை உருவாக்கி அதற்கு தேவையான ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் என மாணவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com