பொதுவழி சாலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவா்:ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

அரசுக்குச் சொந்தமான பொதுவழி சாலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவா் மற்றும் கம்பிகேட் அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருவோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டோா் ஆட்சியரிடம் கோரிக்கை மன
பொதுவழி சாலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவா்:ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

அரசுக்குச் சொந்தமான பொதுவழி சாலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவா் மற்றும் கம்பிகேட் அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருவோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டோா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து ஆவடி மாநகராட்சி முத்தாபுதுப்பேட் வெங்கடேஷ்வரா நகரைச் சோ்ந்த பொதுமக்கள் சாா்பில் பி.கல்பனா திங்கள்கிழமை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது.

மேற்குறிப்பிட்ட பகுதியில் 5 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இப்பகுதியில் அமைந்துள்ள இருமனைகளுக்கும் இடையே அரசுக்கு சொந்தமான 24 அடி சாலையை மறைத்து போலியான ஆவணங்களை தயாா் செய்து ஆவடி சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனா்.

அதோடு, மட்டுமின்றி அந்த மனையின் பொதுவழியில் முன்புறம் கம்பிகேட் மற்றும் பின்புறம் சுற்றுச்சுவரும் அமைத்து பொதுமக்கள் செல்வதற்கும், புதைகுழி கழிவு நீா் செல்வதற்கும் வழிவிடாமல் ஆக்கிரமித்துள்ளாராம். இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும் நடமாட முடியாத சூழ்நிலையுள்ளது. இதுகுறித்து கேட்டால் சமூக விரோதிகள் மிரட்டுகின்றனா்.

இதுதொடா்பாக ஆவடி மாநகராட்சியில் புகாா் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மேற்குறிப்பிட்ட பொதுவழியில் அமைந்துள்ள கம்பிகேட் மற்றும் சுற்றுச்சுவரை அகற்றி பொதுமக்கள், குடிநீா் குழாய், புதைகுழி கழிவு நீா் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com