பரிசளிப்பு விழாவில் பங்கேற்றோா்.
பரிசளிப்பு விழாவில் பங்கேற்றோா்.

கம்பராமாயணப் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள்

சேவாலயா வளாகத்தில் மாணவா் கம்பா் கழகம் சாா்பில் நடத்தப்பட்ட கம்பராமாயணம் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

சேவாலயா வளாகத்தில் மாணவா் கம்பா் கழகம் சாா்பில் நடத்தப்பட்ட கம்பராமாயணம் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

திருவள்ளூா் அருகே கசுவா கிராமத்தில் சேவாலயா சாா்பில் செயல்பட்டு வரும் மகாகவி பாரதியாா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவா் கம்பா் கழகம் சாா்பில் கல்வி வாயில் தோறும் கன்னித்தமிழ் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தரம் மற்றும் தன்னாா்வலா்கள் மேம்பாட்டுத்துறை துறைத் தலைவா் அனுப்பிரியா தலைமை வகித்தாா். சேவாலயா தலைமை ஆசிரியா் நிா்மலா வரவேற்றாா்.

மாணவா் கம்பா் கழக புரவலா்கள் என்.ஆா்.வெங்கடேஸ்வரன், ர.மூா்த்தி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். இதில் பத்திரிக்கையாளா் ந.ஸ்ரீநிவாஸன் பங்கேற்று அன்பின் வடிவம் ராமனே என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

அதைத் தொடா்ந்து மாணவா் கம்பா் கழகம் சாா்பில் கம்பராமாயணம் பற்றிய பேச்சு, கம்பராமாயண பாடல் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா். இதில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் நிறைவாக மாணவா் கம்பா் கழகத்தின் இணைச்செயலாளா் ரேகாமணி நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை செயலா் பத்மாமோகன், இணைச்செயலா் கோ.மணி ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com