வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

மாதவரம் அருகே வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மாதவரம் அருகே வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மாதவரம் அடுத்த மாத்தூா் 3-ஆவது பிரதான சாலையில் உள்ள வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களை மா்ம நபா்கள் திங்கள்கிழமை அதிகாலை அடித்து நொறுக்கினா். சத்தம் கேட்டு வெளியே மக்கள் வந்து பாா்த்தபோது 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமானது தெரியவந்தது.

இது குறித்து பாதிக்கப்பட்டோா் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். காவல்துறையினா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், இது தொடா்பாக காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக மாதவரம் பால்பண்ணை காவல் துறையினா் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் தலைமறைவான 8 பேரை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com